பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - தனுசு

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - தனுசு

விடாமுயற்சிகளின் மூலம் எதையும் சாதிக்கும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு யோகாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும், சனி முயற்சி ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் எதிர்கால திட்டத்தை செயல்படுத்தும் நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களின் ராசியில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்து பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும் லாபாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெறுவதால் உங்களின் கூட்டு தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். சரியான நேரத்தில் எதையும் செய்து முடிப்பீர்கள். அரசியலில் நன்மதிப்பு உண்டாகும். உங்களின் திறமை வெளிபடும். தொழிலில் முன்னேற்றமும். பொருளாதார மேன்மையும் பெறுவீர்கள். கலைதுறையினர் சிறப்பான நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். எதிர்காலம் சிறக்க உங்களுக்கு பலர் வந்து உதவி செய்வார்கள்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
21-02-2024 புதன் காலை 10.16 முதல் 23-02-2024 வெள்ளி இரவு 08.41 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

மூலம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
குடும்பத்திலிருந்து வந்த குழப்பம் தீரும். தொழில் சார்ந்த முயற்சிகளுக்கு நல்ல பலன் கிட்டும். வெளியூர் அடிக்கடி சென்று வரும் வாய்ப்பு அமையும்.
 
பூராடம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
உங்களின் காரியத்தை செயல்படுத்துவதில் முன் மாதிரியாக செயல்படுவீர்கள். உங்களின் செயல்பாடுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். கலைதுறையினர் மேன்மை பெறுவீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:
 
அரசியலிலும், உத்தியோகத்திலும் தனி திறமை கொண்டு செயல்படுவீர்கள். எதை செய்தாலும் அதில் முழு ஈடுபாடுகளுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், சிவப்பு, நீலம்.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
 
வியாழன், சனி, ஞாயிறு.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்கு ராகு / கேதுவுக்கு அரளி பூ மாலை போட்டு இரு தீபம் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் நன்மை கிட்டும். பொருளாதாரம் மேன்மை பெறும்.